படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

காயம் காரணமாக ஆசியக் கோப்பையிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை!

காயம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் இளம் வீராங்கனை விலகியுள்ளார்.

DIN

காயம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் இளம் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் விலகியுள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 19) தொடங்கியது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது, இந்திய அணியின் இளம் வீராங்கனைகளில் ஒருவரான ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு ஃபீல்டிங்கின்போது கை விரலில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அவர் காயம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயங்கா பாட்டீலுக்குப் பதிலாக இடது கை சுழற்பந்துவீச்சாளரான தனுஜா கன்வர் அணியில் மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தனுஜா கன்வர்

26 வயதாகும் தனுஜா இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

மகளீர் பிரிமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஸ்ரேயங்கா பாட்டீல், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும், அவர் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீராங்கனையாக வலம் வந்தார்.

காயம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயங்கா பாட்டீல், டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக முழு உடல் தகுதி பெற்று அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT