படம் | AP
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகரும் ஜோ ரூட்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.

DIN

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். அவர் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 32-வது சதமாகும். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் 2-வது இடத்தில் இருக்கிறார். இன்னும் இரண்டு சதங்கள் எடுத்தால், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 33 சதங்களுடன் அதிக சதமடித்த வீரராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலஸ்டர் குக் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

எதிர்நீச்சல் போடுபவர்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

SCROLL FOR NEXT