கேரளத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஜலஜ் சக்சேனா ரஞ்சி கோப்பையில் முதன்முதலாக புதிய சாதனையை படைத்துள்ளார்.
ரஞ்சி கோப்பை குரூப் சி பிரிவில் உத்தர பிரதேசத்துக்கு எதிராக சேவியர் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் ஜலஜ் சக்சேனா இந்த சாதனையை செய்தார்.
ரஞ்சியில் 6,000 ரன்கள், 400 விக்கெட்டுகள் எடுத்த முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிக்க: 2 வீரர்களை தக்கவைத்தது ஏன்? பாண்டிங் வியூகத்தில் ஐபிஎல் கோப்பை..! பஞ்சாப் அணி சிஇஓ பேட்டி!
கேரளத்தின் முந்தையப் போட்டியில் சக்சேனா 6,000 ரன்களை கடந்து அசத்தியிருந்தார். நிதீஷ் ராணாவை விக்கெட் எடுத்ததன் மூலம் 400 விக்கெட்டுகள் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ரஞ்சியில் கோப்பையில் வரலாற்று சாதனை
ரஞ்சி கோப்பைவரலாற்றில் 13ஆவது நபராகவும் 29ஆவது முறையாக 5 விக்கெடுகளையும் எடுத்து அசத்தியுள்ளார் ஜலஜ் சக்சேனா.
37 வயதாகும் ஜலஜ் சக்சேனா தனது முதல் தர கிரிக்கெட் போட்டியினை மத்திய பிரதேசத்துடன் 2005இல் தொடங்கினார். அங்கு 11 வருடம் விளையாடி 159 விக்கெட்டுகள், 4,401 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க: பாக். தொடர்: ஆஸி.யின் புதிய டி20 கேப்டன் நியமனம்!
2016-17 சீசனில் கேரள அணிக்கு மாறினார். கேரளத்தின் முதல் தர கிரிக்கெட் போட்டியில் கே.என்.அனந்தபதம்நாபனுக்குப் பிறகு அதிகமான விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்திய லெஜண்ட்டுகள் வரிசையில் இடம்
கடந்த சீசனில் ஜலஜ் சக்சேனா இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் 9,000 ரன்கள், 600 விக்கெட்டுகள் எடுத்த 4ஆவது இந்தியர் என்ற சாதனையை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக இந்த சாதனையை விநோ மான்கட், மதன் லால், பர்வேஜ் ரசூல் நிகழ்த்தியுள்ளார்கள்.
ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஆக்டிவாக இருக்கும் எந்த ஆல் ரவுண்டரும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜலஜ் சக்சேனா.
இந்தியாவின் லெஜன்ட்ஸ் விஜய் ஹசாரே, மதன் லால், சுனில் ஜோஷி வரிசையில் ஜலஜ் சக்சேனாவும் இணைகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.