இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆஸி. ஏ அணியுடன் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா ஏ அணி மோசமான தோல்வியை தழுவியது.
2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பிடித்தார். இருந்தும் மோசமான நிலைமையிலேயே இந்தியா ஏ அணி தோற்றது.
2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 161, 2ஆவது இன்னிங்ஸில் 229க்கு ஆல் அவுட்டானது.
இதையும் படிக்க: தோல்விகளில் இருந்து சாதனை படைத்தது எப்படி? சஞ்சு சாம்சன் பேட்டி!
ஆஸி. முதல் இன்னிங்ஸில் 223 ரன்களும் 2ஆவது இன்னிங்ஸில் 169 ரன்களும் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசி. இடம் வரலாற்று தோல்வியடைந்த இந்திய அணி அடுத்து ஆஸி. உடன் பார்டர் - கவாஸ்கர் தொடர் விளையாட இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெருகின்றன.
கடைசி பிஜிடி தொடரில் இந்தியா வென்றிருந்தாலும் உலகக் கோப்பைகளில் இந்திய அணி ஆஸி.யிடம் தோல்வியையே சந்தித்துள்ளது.
குறிப்பாக 2023 ஆம் ஆண்டின் டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை இந்திய ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்.
நவ.22ஆம் தேதி பிஜிடி தொடர் ஆரம்பிக்கிறது. இதற்கான பயிற்சியில் ஈடுபட ஆஸி. மூத்த வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது போட்டியில் இளம் வீரர்களை களமிறக்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.