ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) படம் | ஐசிசி
கிரிக்கெட்

கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு கடினமாக இருக்கும்: ரிக்கி பாண்டிங்

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ஜஸ்பிரித் பும்ராவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ஜஸ்பிரித் பும்ராவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

கடினமாக இருக்கும்

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானதாக இருக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரிக்கி பாண்டிங்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அணியில் இல்லாத பட்சத்தில், இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி என இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து கவனித்து கொள்ள வேண்டியிருக்கும். கேப்டன் பொறுப்பு அவருக்கு கடினமானதாக இருக்கும். அவர் எத்தனை ஓவர்கள் பந்துவீசப் போகிறார்? அவர் அதிக ஓவர்கள் வீசுவாரா? போன்றவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில், அணியின் துணைக் கேப்டனான ஜஸ்பிரித் பும்ரா அணியைக் கேப்டனாக வழிநடத்துவார். பும்ரா மிகவும் அனுபவமிக்க வீரர். கடினமான காலங்களில் பும்ரா சிறப்பாக செயல்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர்களும் அவரது தலைமையில் சிறப்பாக வழிநடத்தப்படுவார்கள். டி20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா அணியின் மிக முக்கியமான வீரர் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களால், கேப்டன் ரோஹித் சர்மாவால் விளையாட முடியாது எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவா்கள் காயம்

தில்லியில் ரேபிஸ் நோயால் இதுவரை 49 போ் உயிரிழப்பு

6 மாதங்களுக்குபின் வடநெம்மேலி பாம்புப் பண்ணை திறப்பு

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

SCROLL FOR NEXT