கௌதம் கம்பீர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை அனுப்பாதீர்கள்: முன்னாள் இந்திய வீரர்

பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை பிசிசிஐ அனுப்ப வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரை தாக்கிப் பேசியுள்ளார்.

DIN

பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை பிசிசிஐ அனுப்ப வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அவரை தாக்கிப் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான சில இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மீதமுள்ள வீரர்கள் இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்பு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுப்பாதீர்கள்

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்பாக கௌதம் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய நிலையில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை பிசிசிஐ அனுப்ப வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவரை தாக்கிப் பேசியுள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியதைப் பார்த்தேன். ஊடகத்தை சந்தித்து பேசும் பொறுப்புகளிலிருந்து கௌதம் கம்பீரை பிசிசிஐ விலக்கி வைத்திருப்பது நல்ல முடிவாக இருக்கும் என நினைக்கிறேன்.

அவர் அணிக்கு பயிற்சி அளிக்கும் வேலையை மட்டும் மேற்கொள்ளட்டும். பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, அவர் குணம் வெளிப்படுகிறது. ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் போன்றோர் அவரைக் காட்டிலும் பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு சிறந்தவர்களாக இருப்பார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதம் கம்பீர் பேசிய விஷயங்களில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எதனைத் தாக்கி பேசியுள்ளார் என்பதை அவரது பதிவில் குறிப்பிடவில்லை. இது தொடர்பாக மஞ்ச்ரேக்கரிடம் கேட்பதற்காக தொடர்பு கொண்டபோது, அவர் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

8 புதிய போயிங் 737 விமானங்களை இணைத்துக்கொள்ளும் ஸ்பைஸ்ஜெட்!

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

“Feel Good, Comedy Film!” குமாரசம்பவம் படம் பற்றி பிரபலங்கள்!

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

SCROLL FOR NEXT