முன்னாள் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பிரட் லீ கோலி, ரோஹித்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் அதன் சொந்த மண்ணில் விளையாடுகிறது.
நியூசிலாந்துடன் இந்திய அணி வரலாற்று தோல்வியை தழுவியது. இந்தியாவின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மோசமான ஃபார்மில் இருக்கிறார்கள். பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள்.
ரோஹித் கடைசி 11 டெஸ்ட் போட்டிகளில் 588 ரன்கள், சராசரி 29.40 உடனும் கோலொ 250 ரன்களுடன் சராசரி 22.72 உடனும் விளையாடியுள்ளார்கள்.
இந்நிலையில் ஆஸி.யின் வேகப் பந்துவீச்சாளர் பிரட் லீ தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:
சொதப்புவது ஏன்?
தொடர்ச்சியாக குறைவான ரன்களே எடுத்தால் அழுத்தம் வருவது இயல்பு. அதனால், விராட் கோலி, ரோஹித் சர்மா புதிய யோசனைகளை தேர்வு செய்வது நல்லது.
இவர்கள் இருவருமே சாம்பியன் வீரர்கள். எனெனில் அவர்களது அடிப்படை மற்றவர்களை சிறப்பாக இருக்கும். தற்போது அவர்கள் செய்ய வேண்டியது ரீசெட் பட்டனை அழுத்த வேண்டியதுதான்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ரோஹித், கோலியை பந்துவீச்சில் மிரட்டுவார்கள். அதனால் அவர்கள் சீக்கிரமே பேட்டிங்கில் மீண்டு வரவேண்டும்.
தொழில்நுட்பக் குறைபாடு
கோலி, ரோஹித் இருவருமே தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவுக்கு கிரிக்கெட்டை விட்டு பின்னர் புத்துணர்ச்சியாக ஆடுகளத்துக்கு வரலாம். ஏனெனில் அவர்கள் ஆஸிக்கு சென்றால் வேகப் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் மிரட்டும் தொனியில் வீசுவார்கள்.
ரோஹித் சர்மா ஆட்டமிழக்கும் விதத்தை பார்த்தால் தெரியும். விரைவான பந்துகளுக்கு ஆட்டமிழக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக அவர் எப்படி விளையாடுவார் எனத் தெரியும். இது தொழில்நுட்பக் குறைபாடுதான். உலக கிரிக்கெட்டில் ஃபுல் ஷாட்டை சிறப்பாக அடிப்பதில் ரோஹித்தும் ஒருவர். ஆனால், தற்போது மிகவும் அதிரடியாக ஆட நினைத்து ஆட்டமிழக்கிறார்.
பந்து வருவதுக்கு முன்னதாகவே பேட்டை முன்னதாகவே பேடிலிருந்து எடுக்கிறாரா? இது தொழில்நுட்ப கோளாறா? முன்னதாக செல்கிறாரா? அல்லது மெதுவாக செல்கிறாரா? தயக்கத்துடன் விளையாடுகிறாரா எனக்கே ஆச்சரியாமாக இருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.