ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட வேண்டும் என மூத்த ஆஸ்திரேலிய வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட வேண்டும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு மிக முக்கியமான தொடர் என்பதால் இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையேயான போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு பார்டர் - கவாஸ்கர் தொடரின்போது, அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறினார்.

அந்த தொடரின்போது, ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டினை அஸ்வின் மூன்று முறை வீழ்த்தினார். அஸ்வினுக்கு எதிராக ஸ்மித் 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

கவனம் தேவை

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ள நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட வேண்டும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்டீவ் ஸ்மித்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய மண்ணில் ஆஃப் ஸ்பின்னில் ஆட்டமிழப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவர் பல நல்ல பந்துவீச்சு திட்டங்களுடன் வருவார். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் சில தருணங்களில் எனக்கெதிராக அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். ஆனால், எஸ்சிஜி மைதானத்தில் அவருக்கு எதிராக நான் நன்றாக விளையாடினேன்.

அந்த போட்டியில் அவரது பந்துவீச்சை மிகவும் கவனமாக எதிர்கொண்டு 131 ரன்கள் மற்றும் 81 ரன்கள் எடுத்தேன். அதுவே எனது வெற்றிக்கான ரகசியம். அஸ்வினை பந்துவீச்சில் அழுத்தத்தை ஏற்படுத்த விடாமல், அவருக்கு எதிராக கவனமாக விளையாடி ரன்கள் குவிக்க விரும்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

கவினின் பெற்றோருக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்: கனிமொழி

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானம்!

SCROLL FOR NEXT