இந்தியா ஆஸி.க்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தற்போது, இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் 2ஆம் நாளை முடித்துள்ளது.
ஜெய்ஸ்வால் 90 ரன்கள் (193 பந்துகளில்) கே.எல்.ராகுல் 62 ரன்கள் (153 பந்துகளில்) எடுத்து அசத்தியுள்ளார்கள்.
ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் பல சாதனைகளை முறியடித்துவருகிறார்கள். பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய பந்துவீச்சினால் இந்திய அணியின் தொடக்க வீரர்களை எதுவும் செய்யமுடியவில்லை.
மொத்தமாக இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
முதல் இன்னிஸில் 150க்கு ஆல் அவுட்டான இந்திய அணியா இது என்பதுபோல் விளையாடியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.