விராட் கோலி (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

விராட் கோலியின் சதத்தை தடுக்க தவறிய ஆஸ்திரேலியா; ஆலன் பார்டர் அதிருப்தி!

விராட் கோலியின் சதத்தைத் தடுக்க ஆஸ்திரேலிய அணி தவறிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

DIN

விராட் கோலியின் சதத்தைத் தடுக்க ஆஸ்திரேலிய அணி தவறிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கடந்த 18 மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் இருந்த விராட் கோலி, பெர்த் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார்.

ஆலன் பார்டர் அதிருப்தி

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்த நிலையில், விராட் கோலியின் சதத்தைத் தடுக்க ஆஸ்திரேலிய அணி தவறிவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அதிருப்தி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆலன் பார்டர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பதைத் தடுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தவறிவிட்டனர். அவர் எளிதாக சதம் அடித்தது உண்மையில் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விராட் கோலியை இதே முழு நம்பிக்கையுடன் விளையாட ஆஸ்திரேலிய வீரர்கள் அனுமதிக்கக் கூடாது என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களிடம் அது இல்லையா? மாரி செல்வராஜைக் கேள்விகேட்ட நடிகை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தேர்தல் ஆணையத்துக்கு தவெக ஆலோசனை!

சிறப்பு தீவிர திருத்தம்: குடியுரிமை மீதான தாக்குதல் - திருமாவளவன்

ஷாருக்கான் பிறந்த நாள்: கீங் டீசர்!

SCROLL FOR NEXT