பிரவீன் ஜெயவிக்ரமா 
கிரிக்கெட்

ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை!

ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரமாவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 139 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

இவர் ஐஐசி விதிப்பிரிவு 2.4.7 மீறியதாக ஒப்புக்கொண்டதன் பேரில் அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

ஜெயவிக்ரமா கடைசியாக 2022 இல் இலங்கை அணிக்காக 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், அந்த 15 போட்டிகளில் மொத்தம் 32 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இதையும் படிக்க:மே.இ.தீவுகள் தொடர்: பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் மற்றும் லங்கா பிரீமியர் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகள், ஐசிசி இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்தத்தின் மூலம், சட்டவிதிகள் 1.7.4.1 மற்றும் 1.8.1 ஆகியவற்றை மீறியதால் அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரவீன் ஜெயவிக்ரமா 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும், 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் விளையாடியது இவரது கடைசிப் போட்டியாகும்.

இதையும் படிக்க:அரசு இல்லத்திலிருந்து வெளியேறும் கேஜரிவால்! எங்கு செல்கிறார்?

எல்பிஎல் 2021 இல், ஜெயவிக்ரமா, இரண்டாவது கோப்பையை வென்ற யாழ்ப்பாண கிங்ஸ் அணியில்ல் இடம்பெறிருந்தார். அந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்பிஎல் 2024 இல், அவர் தம்புள்ளா சிக்ஸர்கள் அணிக்காக மாறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-ஆவது முறையாக பிபிஎல் கோப்பை வென்ற பெர்த் ஸ்கார்சிஸ்!

யு19 உலகக் கோப்பை: ஜுவெல் ஆண்ட்ரூ அரைசதம்; மே.இ.தீவுகள் 226 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

"மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என் குடும்பம் : கானா வினோத் வீட்டில் கமருதீன் உருக்கம்!

கோவையில் சேற்றில் சிக்கிய காட்டு யானை 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு

SCROLL FOR NEXT