ரஷீத் கானின் திருமண விழாவில் கலந்து கொண்ட ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள். 
கிரிக்கெட்

ரஷீத் கான் திருமண விழா கோலாகலம்.. துப்பாக்கியுடன் வலம் வந்த பாதுகாவலர்கள்!

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது.

DIN

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானின் திருமண விழா வியாழக்கிழமை(அக்டோபர் 3) காபூலில் கோலாகலமாக நடைபெற்றது.

ரஷீத் கானின் திருமண விழாவில் ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், அவரின் திருமணம் நடைபெறும் இம்பீரியல் கான்டினென்டல் ஹோட்டலின் வெளியில் கையில் துப்பாக்கியுடன் பாதுகாவலர்கள் பலரும் வலம் வந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்க..இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 37 பலி, 151 பேர் காயம்!

26 வயதான ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகவும் பிரபலம். இவர் முதலில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமானார். அதன்பின்னர் இப்போது குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இதுவரை 149 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி சிபிஎல், பிஎஸ்எல், பிக்பாஸ் லீக், மேஜர் லீக் என அனைத்துப் போட்டிகளிலும் விளையாடக்கூடியவர்.

இதையும் படிக்க..நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட்?

ரஷித் கான் இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும், 105 ஒருநாள் போட்டிகளில் 190 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இது தவிர 93 டி20 போட்டிகளில் 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரஷித் கான் விளையாடி வருகிறார். அவர் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஆப்கானிஸ்தானுக்காக இடம்பெற்றார்.

மேலும், ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது.

இதையும் படிக்க..கோவையில் ராணுவ தொழிற்பூங்கா: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி!

இதுகுறித்து மற்றொரு ஆப்கன் வீரரான முகமது நபி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஒரே ஒரு கிங் கான். ரஷீத் கானுக்கு திருமண நாள் வாழ்த்துகள். உங்கள் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி, வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க..காணாமல் போன சிறுமி; சிக்கிய தந்தை!

கடந்த 2020 ஆம் ஆண்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை போட்டிகளில் கோப்பை வென்ற பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT