ரோஹித் சர்மா படம் | AP
கிரிக்கெட்

46 ரன்களுக்கு ஆல் அவுட்; ரோஹித் சர்மா கூறியது என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நேற்று (அக்டோபர் 16) முதல் தொடங்கியது. மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.

46 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இரண்டாம் நாளான இன்று (அக்டோபர் 17) ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

ரோஹித் சர்மா கூறியதென்ன?

இந்திய அணியின் மோசமான பேட்டிங்குக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது: அணியின் கேப்டனாக 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது என்னுடைய முடிவே. ஓராண்டில் ஓன்று அல்லது இரண்டு மோசமான முடிவுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றார்.

முதல் முறையாக சொந்த மண்ணில் 50 ரன்களுக்கும் குறைவான ஸ்கோரில் இந்திய அணி ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT