படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.

வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்மதுல் ஹாசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர் மற்றும் கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்கா - 308/10

தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 308 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கைல் வெரைன் சதம் அடித்து அசத்தினார். அவர் 144 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வியான் முல்டர் 54 ரன்களும், டேன் பிட் 32 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹாசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹாசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வங்கதேசம் - 101/3

தென்னாப்பிரிக்க அணி 308 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கியது. வங்கதேசம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்மதுல் ஹாசன் ஜாய் 38 ரன்களுடனும், முஷ்ஃபிகர் ரஹிம் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 101 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்! பாகிஸ்தான் ராணுவ தளபதி

இந்த வார்த்தைகள் உங்களை அடைந்தால்.. அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு

எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து விலகிய கனிகா.... காரணம் என்ன?

இபிஎஸ் ஒன்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அல்ல!அதிமுகவின் தோல்வி மேற்கிலிருந்து தொடங்கும்! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

உத்தரகண்டில் மஞ்சள் எச்சரிக்கை: மீட்பு பணியில் தொய்வு!

SCROLL FOR NEXT