புணே டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக நியூஸி. முதலில் பேட்டிங்!
இந்தியா - நியூஸிலாந்து இடையேயான இரண்டாது டெஸ்ட் போட்டி பற்றி...
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் தொடா் நடைபெறும் நிலையில், பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அபார வெற்றிபெற்றது. 36 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்டில் நியூஸிலாந்து வென்றது.
இந்நிலையில் புணே நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க : ஐசிசி தரவரிசை: விராட் கோலியை முந்தினார் ரிஷப் பந்த்!
அணி விவரம்
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கே.எல். ராகுலுக்கு பதிலாக கில், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும், முகமது சீராஜுக்கு பதிலாக ஆகாஷ் தீப்பும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூஸிலாந்து அணியில் மேட் ஹென்ரிக்கு பதிலாக சாண்ட்னர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.