இந்திய அணி நியூசிலாந்து உடன் 2ஆவது டெஸ்ட் போட்டியில் புணேவில் விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் நியூசி. 259 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 45.3 ஓவரில் 156க்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஓராண்டில் விரைவாக 1000 ரன்களை எடுத்த இளம் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
22 வயதாகும் ஜெய்ஸ்வால் இதுவரை 13 போட்டிகளில் 1,295 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு 23 வயதில் 1979ஆம் ஆண்டு திலிப் வெங்சர்கார் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.
இந்தாண்டு அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர் பட்டியலில் ஜோ ரூட்டுக்கு (1,305) அடுத்து ஜெய்ஸ்வால் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு, ஜெய்ஸ்வால் 10 போட்டிகளில் 1,007 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 59.23 என்பது குறிப்பிடத்தக்கது. 2 சதம், 6 அரைசதங்கள் இதில் அடங்கும்.
சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு
இதற்கு முன்பு சச்சின் ஓராண்டில் அதிகபட்சமாக 1,562 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் இருப்பதால் ஜெய்ஸ்வால் சச்சின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.
சச்சின் - 1,562 (2010)
சேவாக் 1,462 (2008)
ஜெய்ஸ்வால் - 1, 007 (2024)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.