படம் | AP
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா! அடுத்த போட்டியில் தோற்றால்?

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்திய அணி 62.82 சதவிகித வெற்றிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. 62.50 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 55.56 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும், 50.00 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும், 47.62 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முறையே 6,7,8 மற்றும் 9-வது இடங்களில் உள்ளன.

சரிவை சந்தித்த இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி 68.06 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் நீடித்தாலும், வெற்றி சதவிகிதத்தில் சரிவை சந்தித்துள்ளது. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 68.06 சதவிகிதத்திலிருந்து 62.82 சதவிகிதமாக குறைந்தது. தரவரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் ஆஸ்திரேலிய அணி வெறும் 0.32 சதவிகிதமே இந்தியாவைக் காட்டிலும் வெற்றி சதவிகிதத்தில் குறைவாக உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய அணி கடும் போட்டியாளரான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது.

மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மீதமுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாா் வாக்காளா் பட்டியல் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு

செங்கம் பகுதியில் அனுமதியில்லா செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராகச் சரிவு

SCROLL FOR NEXT