ரோஹித் சர்மா...  Kunal Patil
கிரிக்கெட்

இந்தியாவுக்கு 359 ரன்கள் இலக்கு! ரோஹித் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பு!

2ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

DIN

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் அக்டோபர் 24இல் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2ஆவது இன்னிங்ஸில் நியூசி. 255 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 359 ரன்கள் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2ஆவது இன்னிங்ஸில் அஸ்வின் 2, ஜடேஜா 3, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் மோசமான பேட்டிங்கினை செய்துள்ளார். 8 ரன்களில் சாண்ட்னர் ஓவரில் ஆட்டமிழந்தார்.

தற்போது கில் 22, ஜெய்ஸ்வால் 46 ரன்களுடனும் விளையாடி வருகிறார். இந்திய அணி 12 ஓவர் முடிவில் 81/1 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் 2 நாள்கள் உள்ள இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 278 ரன்கள் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

ஜெயிலர் - 2 படத்தில் வித்யா பாலன்!

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சுக்குள் நீதான்... ருக்மணி வசந்த்!

சீனிப் பழமே... அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT