படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

ஆப்கன், அயர்லாந்து தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

DIN

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மூன்று போட்டிகளும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளன. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் செப்டம்பர் 27 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் அக்டோபர் 2 ஆம் தேதியும் தொடங்குகிறது. 2 டி20 மற்றும் 3 ஒருநாள் என மொத்தமுள்ள 5 போட்டிகளும் அபு தாபியில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

டெம்பா பவுமா (கேப்டன்), ஓட்னில் பார்ட்மேன், நண்ட்ரே பர்கர், டோனி டி ஸார்ஸி, ஜோர்ன் ஃபார்ட்யூன், ரீஸா ஹென்ரிக்ஸ், அய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, ஆண்டைல் பெஹ்லுக்வாயோ, காபா பீட்டர், ஆண்டைல் சிமலேன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன் மற்றும் லிஸாத் வில்லியம்ஸ்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

அய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஓட்னில் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்க், நண்ட்ரே பர்கர், ஜோர்ன் ஃபார்ட்யூன், ரீஸா ஹென்ரிக்ஸ், பாட்ரிக் க்ரூகர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, காபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், ஆண்டைல் சிமலேன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லிஸாத் வில்லியம்ஸ்.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

டெம்பா பவுமா (கேப்டன்), ஓட்னில் பார்ட்மேன், நண்ட்ரே பர்கர், டோனி டி ஸார்ஸி, ஜோர்ன் ஃபார்ட்யூன், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, ஆண்டைல் பெஹ்லுக்வாயோ, காபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன் மற்றும் லிஸாத் வில்லியம்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT