படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

மழை வென்றது; சமனில் முடிந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலியா டி20 தொடர்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

DIN

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று டி20 தொடர் சமனில் இருந்தது. டி20 தொடரை வெல்லப் போவது என்ற எதிர்பார்ப்பில் இன்று (செப்டம்பர் 15) மூன்றாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.

மழை வென்றது

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மழையினால் தாமதமானது. மழை நின்ற பிறகு போட்டி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

இன்றையப் போட்டியில் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலிய அணி இருவரில் ஒருவர் டி20 தொடரை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இன்றைய நாளில் மழை வென்றுவிட்டது.

இதன் மூலம், இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT