ரோஹித் சர்மா (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு வித்தியாசமானது: ரோஹித் சர்மா

ராகுல் டிராவிட்டை ஒப்பிடுகையில் கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் அடங்கிய குழு வித்தியாசமனது என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

ராகுல் டிராவிட்டை ஒப்பிடுகையில் கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் அடங்கிய குழு வித்தியாசமனது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவின் செயல்பாடுகள் வித்தியாசமான ஸ்டைலில் இருப்பினும், தங்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 19) தொடங்கவுள்ள நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா பேசியதாவது: ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர் மற்றும் பராஸ் மாம்ப்ரே அடங்கிய அடங்கிய பயிற்சியாளர்கள் குழுவின் ஸ்டைல் வித்தியாசமானது. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவின் ஸ்டைல் வித்தியாசமானது. ஆனால், அதனால் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. நல்ல புரிதல் என்பது முக்கியம். எனக்கும் கௌதம் கம்பீருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது என்றார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT