படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச மூத்த வீரர் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தது தொடர்பாக...

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.

சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள்

இந்த போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்களும் குவித்த ரஹிம் சர்வதேச போட்டிகளில் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.

முஷ்ஃபிகர் ரஹிம்

சர்வதேச போட்டிகளில் முஷ்ஃபிகர் ரஹிம் 15,194 ரன்கள் குவித்துள்ளார். முன்னதாக, வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் 15,192 ரன்களுடன் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராக இருந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி முஷ்ஃபிகர் ரஹிம் முதலிடம் பிடித்துள்ளார்.

14,696 ரன்களுடன் ஷகிப் அல் ஹசன் மூன்றாவது இடத்திலும், 10,694 ரன்களுடன் மஹ்மதுல்லா நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை, ரூ.50,000 திருட்டு

தற்காலிக நீதிபதிகள் நியமனம்: 9 மாதங்களாக பரிந்துரைகளை அனுப்பாத உயா்நீதிமன்றங்கள்!

பள்ளி மாணவா்களுக்கு குடை

கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT