சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா ஏ அணி கேப்டன் மயங்க் அகர்வால். 
கிரிக்கெட்

துலிப் கோப்பை: இந்தியா ஏ அணி சாம்பியன்!

துலிப் கோப்பையில் இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது.

DIN

துலிப் கோப்பையில் இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது.

துலிப் கோப்பைத் தொடர் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கியது. இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி, இந்தியா டி அணிகள் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதிய நிலையில் மூன்று சுற்றுகளாக மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றன.

முதல் இரண்டு சுற்றுகள் முடிவில் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி முதலிடத்திலும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி இரண்டாம் இடத்திலும், மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி மூன்றாம் இடத்திலும் இருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி கடைசி இடத்திலும் இருந்தது.

மனவேதனையாக இருக்கிறது... வேள்பாரி நாவலைக் குறிப்பிட்டு ஷங்கர் எச்சரிக்கை!

இந்த நிலையில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்தியா சி அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 90.5 ஓவர்களில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சாசுவத் ராவத் 124 ரன்கள் விளாசினார்.

அடுத்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா சி அணி சார்பில் அதிகபட்சமாக அபிஷேக் 82 ரன்கள் விளாசினார். அந்த அணி 71 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று இந்தியா வரலாற்று சாதனை!

பின்னர் 63 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 66 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பராக் 7 ரன்கள் அடித்தார். அதைத் தொடர்ந்து இந்தியா சி அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், 81.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு அந்த அணியால் 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 111 ரன்கள் விளாசினார். சுதர்சன் சதம் அடித்தும் இந்தியா சி அணியால் வெற்றிபெற முடியவில்லை.

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்: பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!

இதன் மூலம் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா ஏ அணிக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருது அன்ஷுல் காம்போஜுக்கும், சிறந்த ஆட்டக்காரர் விருது ராவத்துக்கும் வழங்கப்பட்டது.

போட்டி முடிவுகள்

துலிப் கோப்பைத் தொடரின் சாம்பியன் பட்டத்தை மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ வென்ற நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2 ஆம் இடத்தையும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி 3-ஆம் இடத்தையும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

ஈரான் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து: பலி 51 ஆக உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா கூட்டணி எம்பிக்கள் கார்கே, ராகுல் தலைமையில் ஆலோசனை!

சென்னை, புறநகரில் 2 நாள்களுக்கு மழை! புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்!

அவைக்குள்ளே அமளி வேண்டாம்! எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பிரமுகர் சாலை விபத்தில் பலி

குளிர்கால கூட்டத்தொடர்! மரபுகளைக் காக்கும் வகையில் செயல்பட ஓம் பிர்லா அறிவுரை!

SCROLL FOR NEXT