அலெக்ஸ் கேரி, ஸ்மித் அதிரடியால் இங்கிலாந்துக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் மூன்றாவது போட்டி ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மேட் ஷார்ட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர். இருப்பினும் இருவரும் முறையே 14 மறும் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மெதுவாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 82 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து வெளியேறினார் ஸ்மித்.
மார்னஸ் லபுசேன் டக் அவுட்டாகி வெளியேற அவருக்குப் பின் வரிசையில் வந்தவர்கள் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, ஹார்டி, கிரீன் ஆகியோர் சில பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோர் கணிசமாக ஏற பங்களிப்பளித்தனர்.
கேமரூன் கிரீன் 42, அலெக்ஸ் கேரி 77*, மேக்ஸ்வெல் 30, ஹார்டி 44 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி 7 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.