தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீசி வருகிறது. 35 ஓவருக்கு 107/3 ரன்கள் எடுத்து வங்கதேசம் விளையாடி வருகிறது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் நஜ்முல் ஹைசைன் ஷண்டோ விக்கெட்டினை வீழ்த்திய அஸ்வின் ஆசியாவில் 420 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பு அனில் கும்ப்ளே 419 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தற்போது, இதை விஞ்சி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
ஆசியாவிலேயே அதிக விக்கெட்டுகள் முதல் இந்தியராகிய அஸ்வின் ஆசியாவில் 2ஆம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவில் முதலிடத்தில் முத்தையா முரளிதரன் 612 விக்கெட்டுகள் முதலிடத்தில் இருக்கிறார்.
மொத்தமாக 101 டெஸ்ட்டில் அஸ்வின் 522 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவில் டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்
612 - முத்தையா முரளிதரன்
420 - ரவி அஸ்வின்
419 - அனில் கும்ப்ளே
354 - ரங்கனா ஹெராத்
300 - ஹர்பஜன் சிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.