ஷுப்மன் கில் படம் | AP
கிரிக்கெட்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 21 ரன்களில் டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய சாதனை படைப்பதை தவறவிட்டுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 21 ரன்களில் டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய சாதனை படைப்பதை தவறவிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 23 ரன்கள் முன்னிலை பெற்றது.

மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்

23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஆகாஷ் தீப் 73 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 94 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பின், ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 85 ரன்களுடனும், ஷுப்மன் கில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் ஷுப்மன் கில் 11 ரன்களில் கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டன் ஷுப்மன் கில் 754 ரன்கள் குவித்துள்ளார். வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க ஷுப்மன் கில்லுக்கு 21 ரன்களே தேவைப்பட்ட சூழலில், அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம், வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வசமே உள்ளது.

இந்திய அணிக்காக டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்

774 ரன்கள் - சுனில் கவாஸ்கர் (மே.இ.தீவுகளுக்கு எதிராக, 1971) (வெளிநாட்டில்)

754 ரன்கள் - ஷுப்மன் கில் (இங்கிலாந்துக்கு எதிராக, 2025) (வெளிநாட்டில்)

732 ரன்கள் - சுனில் கவாஸ்கர் (மே.இ.தீவுகளுக்கு எதிராக, 1978/79) (சொந்த மண்ணில்)

712 ரன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இங்கிலாந்துக்கு எதிராக, 2024) (சொந்த மண்ணில்)

692 ரன்கள் - விராட் கோலி (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2014/15) (வெளிநாட்டில்)

Indian captain Shubman Gill missed out on his biggest Test achievement by 21 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT