படம் | AP
கிரிக்கெட்

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

கடைசி நாளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. கைவம் 4 விக்கெட்டுகள் இருந்தும், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்து பயந்துவிட்டது

டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என சமன்செய்த நிலையில், ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் வாகன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்திருந்தால், கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியிருப்பார். ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அச்சமடைந்துவிட்டது.

இங்கிலாந்து அணிக்கு ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவைப்பட்டது. பயத்தினால் அதிரடியாக விளையாட முயன்று தோல்வியடைந்துவிட்டனர். ஹாரி ப்ரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய சவாலானதாக அமைந்தது என்றார்.

The former captain of the England team has said that the team was panic on the final day of the final Test against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

SCROLL FOR NEXT