தி ஹன்ட்ரட் லீக்கில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவையான நிலையில் சிக்ஸர் அடித்து அசத்திய கிரஹாம் க்ளார்க் விடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடராகும்.
இதில் முதலில் பேட்டிங் செய்த சௌதர்ன் பிரேவ் அணி 100 பந்துகளில் 139/5 ரன்கள் எடுத்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக லாரி எவான்ஸ் 53, ஜேம்ஸ் கோல்ஸ் 49 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ் 141/7 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக கிரஹாம் க்ளார்க் 38 ரன்கள் எடுத்தார்.
கடைசி 3 பந்தில் 5 ரன்கள் தேவையான நிலையில் இரண்டு பந்துகள் டாட் ஆக, கடைசி பந்தில் கிரஹாம் க்ளார்க் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் கிரஹாம் க்ளார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
அழுத்தமான சூழ்நிலையில் சிக்ஸர் அடித்த இவரது விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.