ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா அரைசதம்: தொடரை வெல்ல ஆஸி. மகளிருக்கு 177 ரன்கள் இலக்கு!
கடைசி டி20யில் இந்திய மகளிரணியின் பேட்டிங் குறித்து...
ஆஸ்திரேலிய மகளிருக்கு எதிரான கடைசி டி20யில் இந்திய மகளிரணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 82, ஜெமிமா ரோட்ரிகஸ் 59 ரன்கள் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய மகளிரணி முதல் டி20யில் வென்று, இரண்டாவது டி20யில் தோல்வியுற்றது.
Advertisement
டி20 தொடரை வெல்லப்போவது யார் என்ற நிலையில் கடைசி டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
ஷஃபாலி வர்மா விரைவாகவே ஆட்டமிழக்க, 19 ரன்களுக்கு 1 விக்கெட்டிலிருந்து 140 வரை ஸ்மிருதி மந்தனாவும் ஜெமிமாவும் நன்றாக விளையாடினார்கள்.
அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் அன்னாபெல் சதர்லேண்டு 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். கடைசி ஓவரில் பெத் மூனி 2 ரன் அவுட் செய்து அசத்தினார்.
177 ரன்கள் எடுத்தால்தொடரை வெல்லும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.