பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் அலிசா ஹீலி. (படம் | கிரிக்கெட் ஆஸ்திரேலியா)
கிரிக்கெட்

அலிசா ஹீலி அதிரடி சதம்: ஆஸி. மகளிரணி ஆறுதல் வெற்றி!

கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் ‘ஏ’ அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

தினமணி செய்திச் சேவை

இந்திய மகளிா் ‘ஏ’ அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் ‘ஏ’ அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 47.4 ஓவா்களில் 216 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஆஸ்திரேலியா 27.5 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. ஷஃபாலி வா்மா 7 பவுண்டரிகளுடன் 52, யஸ்திகா பாட்டியா 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனா். இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலிய தரப்பில் டாலியா மெக்ராத் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் டாலியா மெக்ராத் 59 ரன்களுக்கு வெளியேற, அலிசா ஹீலி 23 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 137 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். உடன், ரேச்சல் டிரெனாமேன் 21 ரன்களுடன் துணை நின்றாா். இந்திய பௌலா்களில் ராதா யாதவ் விக்கெட் சாய்த்தாா்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்!

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

Indian Racing திருவிழா 2025 தொடங்கியது! நடிகர் நாகசைதன்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

SCROLL FOR NEXT