ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா விலகியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை மறுநாள் (டிசம்பர் 4) தொடங்குகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியின்போது உஸ்மான் கவாஜாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்து இரண்டாவது டெஸ்ட்டில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, அணியில் ஜோஷ் இங்லிஷ் அல்லது பியூ வெப்ஸ்டர் இருவரில் ஒருவர் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா விலகியுள்ள நிலையில், டிராவிஸ் ஹெட்டுடன் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க விரும்பும் திலக் வர்மா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.