இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தற்போது, இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்பேனில் கடந்த டிச.4ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆஸி. அணி 117.3 ஓவர்களில் 511 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 77 ரன்கள் எடுக்க, இங்கிலாந்தின் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இரவு உணவு இடைவேளை வரையில் இங்கிலாந்து 45 ரன்கள் எடுத்து, 132 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.