முகப்பு
கிரிக்கெட்

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 6 டிசம்பர் 2025, 5:39 pm IST
சதம் விளாசிய மகிழ்ச்சியில் குயிண்டன் டி காக் - படம் | AP
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது.

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய குயிண்டன் டி காக் சதம் விளாசி அசத்தினார். அவர் 89 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் டெம்பா பவுமா 48 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 29 ரன்களும் எடுத்தனர். மேத்யூ ப்ரீட்ஸ்க் 24 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

summary

South Africa, batting first, were bowled out for 270 runs in the third ODI against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.