தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் நன்றாக வழிநடத்தியதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. கழுத்து வலி காரணமாக கேப்டன் ஷுப்மன் கில் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய நிலையில், அணியை கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்தினார்.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் நன்றாக வழிநடத்தியதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்திய விதம் மிகவும் நன்றாக இருந்தது. பந்துவீச்சாளர்களை அவர் நன்றாக பயன்படுத்தினார். ஈரமான பந்தில் பந்துவீச வேண்டிய நிலை இருந்தபோதிலும், அதனை கே.எல்.ராகுல் குறையாக கூறவில்லை. இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, அவரிடம் இந்திய அணி என்ன வித்தியாசமாக செய்திருக்கலாம் எனக் கேட்டபோது, டாஸ் வென்றிருக்கலாம் என பதிலளித்தார். இந்த தொடரில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது.
மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் அவர் அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டார். அணியில் உள்ள வீரர்கள் கே.எல்.ராகுலுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். ஒவ்வொரு முறையும் குல்தீப் யாதவ், நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் (டிஆர்எஸ்) முடிவை எடுக்குமாறு கே.எல்.ராகுலிடம் கூறுவார். குல்தீப் யாதவை ராகுல் சமாதானப் படுத்த வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக, கே.எல்.ராகுலின் கேப்டன்சி மிகவும் நன்றாக இருந்தது என்றார்.
இதையும் படிக்க: நமீபியா அணியின் ஆலோசகராக கேரி கிறிஸ்டன் நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.