சஞ்சு சாம்சன் படம் | AP
கிரிக்கெட்

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று (டிசம்பர் 9) நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா இந்திய அணியில் விளையாடவுள்ளார். பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்திய அணியின் பிளேயிங் லெவன்

அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா, அக்‌ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.

South Africa won the toss and elected to bowl in the first T20I against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டிலும் கலக்கல்! ரூ. 150 கோடி வசூலித்த தேரே இஷ்க் மே!

அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும்!

தந்தைக்குச் சிலை முக்கியமா? அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

தாய்லாந்து - கம்போடியா மக்களின் துயரம்!

தீயவர் குலை நடுங்க படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT