பாகிஸ்தானில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆய்வு செய்துவருகிறது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானில் வரும் ஜனவரியில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இதற்கு முன்னதாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கூட்டமைப்பில் இருந்து பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு செய்யும் கமிட்டியில் சுயாதீன பாதுகாப்பு ஆலோசகரும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அதிகாரிகளும் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இரண்டு கட்டமாக நடைபெறும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முதலில் டி20 தொடரும் 2027 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒருநாள் தொடரும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானுடன் விளையாடிவரும்போது திடலுக்கு அருகில் மனித வெடிகுண்டு வெடிக்கப்பட்டு பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
இதனால், சில இலங்கை வீரர்கள் நாட்டிற்குத் திரும்ப முடிவெடுத்தனர். பின்னர், உயர் அதிகாரிகள் சமாதனம் பேசி கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டன.
டி20 தொடருக்கான இடங்கள், தேதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் அறிவிக்காததும் குறிப்பிடத்தக்கது.
கடாபி திடல், லாகூர் எல்சிசிஏ திடல், ஆஸி. தங்குமிடம் எல்லாம் ஆய்வுசெய்யப்படுகின்றன. ஆஸி. உயர் அதிகாரிகள் பிசிபி தலைவருடன் இது குறித்து கலந்தோசித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.