கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை தொடங்கியது! ஆரம்ப விலை ரூ.100 முதல்!

டி20 உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளதைப் பற்றி...

தினமணி செய்திச் சேவை

அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை தொடங்கியது. இதில், ஆரம்ப விலை ரூ. 100 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படக்கூடிய ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு (2026) இந்தியாவிலும் பாகிஸ்தானுக்கான போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது.

2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் பிப்ரவரி 7, தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் இந்தத் தொடரில் 20 அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பை தொடர் மொத்தம் 8 திடல்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 20 அணிகள் போட்டியிடும் இந்தத் தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியாவில் அகமதாபாத், சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட திடல்களிலும், இலங்கையில் கொழும்பு பிரேமதாசா, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய திடல்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

டி20 உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை இன்று (டிச.11) மாலை 6.15க்கு தொடங்கியது. டிக்கெட்டுகளை ஐசிசியின் அதிகாரபூர்வ https://tickets.cricketworldcup.com/ தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

போட்டிக்கான ஆரம்ப விலை ரூ. 100 முதல் தொடங்கியுள்ளது. சிறிய அணிகள் விளையாடும் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையிலும், டி20 உலகக் கோப்பை தொடரைக் கண்டுகளிக்கும் வகையில் மலிவு விலையில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளதாக பிசிசிஐ செயலர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் திடலில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கான போட்டிகள் உள்பட 7 போட்டிகள் நடைபெறவுள்ளன.

ICC Men’s T20 World Cup 2026 tickets prices start at ₹100 and LKR1000 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாத்மா காந்தி பெயரில் என்ன தவறு? நேருவைத் தொடர்ந்து காந்தியையும் வெறுக்கும் பாஜக! - ஜெய்ராம் ரமேஷ்

ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி!

சௌதி திரைப்பட விழாவில்! முதல் ரோஹிங்கிய படத்துக்கு விருது!

கொல்கத்தாவில் Messi - ஷாருக்கான் சந்திப்பு!

போர்க்களமான சால்ட் லேக் திடல்..! ஊழல் நடந்ததாக மெஸ்ஸி ரசிகர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT