ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 25 பேர் அடங்கிய முதற்கட்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (டிசம்பர் 19) அறிவித்துள்ளது.
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சரித் அசலங்கா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தாசுன் ஷானகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பணிச் சுமையிலிருந்து விடுபட்டு ஒரு பேட்டராக சிறப்பாக விளையாடுவதற்காக அசலங்கா பேட்டராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணி விவரம்
தாசுன் ஷானகா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமில் மிஷாரா, குஷல் பெரேரா, தனஞ்ஜெயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, ஜனித் லியாநாகே, சரித் அசலங்கா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயகே, சஹான் அராச்சிக், வனிந்து ஹசரங்கா, துனில் வெல்லாலகே, மிலன் ரத்நாயகே, நுவான் துஷாரா, ஈஷன் மலிங்கா, துஷ்மந்தா சமீரா, பிரமோத் மதுஷன், மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா, மஹீஷ் தீக்ஷனா, துஷான் ஹேமந்தா, விஜயகாந்த் வியாஸ்காந்த், டிரவீன் மேத்யூ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.