பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கூப்பர் கன்னோலி தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கூப்பர் கன்னோலி பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதிரடி ஆட்டக்காரரான கூப்பர் கன்னோலி முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருப்பதாக கூப்பர் கன்னோலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் எந்தவொரு இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருக்கிறேன். அதனால், மூன்றாவது வீரராக இருந்தாலும் சரி அல்லது மிடில் ஆர்டராக இருந்தாலும் சரி எந்தவொரு இடத்திலும் விளையாடுவதுக்கும் தயாராக உள்ளேன். பிக் பாஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக 3-வது வீரராக களமிறங்கி விளையாடி நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
3-வது வீரராக களமிறங்கி விளையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், ஐபிஎல் தொடரில் வேறு இடத்தில் களமிறங்க வேண்டியிருந்தால், அதனை என்னால் முழுவதுமாக புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், பஞ்சாப் கிங்ஸ் அணி உலகத் தரத்திலான அணி. அந்த அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடுவதை சிறப்பான வாய்ப்பாக கருதுகிறேன் என்றார்.
22 வயதாகும் கூப்பர் கன்னோலி நடப்பு பிக் பாஷ் தொடரில் 3-வது வீரராக களமிறங்கி அதிரடியாக இரண்டு அரைசதங்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.