படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளை தவறவிடும் இங்கிலாந்து வீரர்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து வீரர் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.

ஜேமி ஸ்மித்துக்கு காயம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்காட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின்போது, ஜேமி ஸ்மித்துக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக, அவர் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் ஜேக்கோப் பெத்தேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், 3 போட்டிகள் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடமாட்டார் என்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு அவர் மீண்டும் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் சாக்யூப் மஹ்முத் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடிதடி தகராறில் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு

உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு பிரசாரம்: 9 நாள்களில் 2,500 வழக்கு; 3,900 போ் கைது!

மாா்த்தாண்டம் கல்லூரி முன்னாள் மாணவா்களின் குடும்பக் கூடுகை

விஷம் குடித்து பெண் தற்கொலை

பஹல்காம் பயங்கரவாதிகளுடன் 4 முறை சந்திப்பு: கைது செய்யப்பட்டவா் குறித்து போலீஸாா் தகவல்!

SCROLL FOR NEXT