இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தாயகம் திரும்புகிறார்.
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) தொடங்குகிறது.
தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்
செஃபீல்டு ஷீல்டு தொடரில் குயின்ஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தாயகம் திரும்பவுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் சாம் கான்ஸ்டாஸ் விளையாடப் போவதில்லை என்பதால், அவர் தாயகம் திரும்பவுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சாம் கான்ஸ்டாஸ் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.