திமுத் கருணாரத்னே படம் | ஐசிசி
கிரிக்கெட்

திமுத் கருணாரத்னேவுக்கு ஐசிசி பாராட்டு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் திமுத் கருணாரத்னேவை ஐசிசி வெகுவாக பாராட்டியுள்ளது.

DIN

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் திமுத் கருணாரத்னேவை ஐசிசி வெகுவாக பாராட்டியுள்ளது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் தனது 100-வது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்த இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்னே, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஐசிசி பாராட்டு

இலங்கை அணிக்காக இத்தனை ஆண்டுகள் சிறப்பாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும் விளையாடிய திமுத் கருணாரத்னேவை ஐசிசி வெகுவாகப் பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா பேசியதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனாக திமுத் கருணாரத்னே மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 7-வது வீரர் என்ற பெருமை அவரைச் சேரும். அணிக்காக மிகுந்த அர்பணிப்புடன் செயல்பட்டவர். டெஸ்ட் போட்டியின் ரசிகர்கள், திமுத் கருணாரத்னேவை கண்டிப்பாக மிஸ் செய்வார்கள். ஐசிசியின் சார்பாக அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள திமுத் கருணாரத்னே, 7,222 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 244 ஆகும். இலங்கை அணிக்காக 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,316 ரன்கள் குவித்துள்ளார்.

2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு கால இடைவெளியில் இலங்கை அணியை 30 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக கருணாரத்னே வழிநடத்தியுள்ளார். அதில் 12 போட்டிகளில் வெற்றியும், 12 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார்.

திமுத் கருணாரத்னே அவரது 100-வது டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் முறையே 36 ரன்கள் மற்றும் 14 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT