கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்! -முன்னாள் கேப்டன் நம்பிக்கை

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும் என்று முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DIN

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும் என்று முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பல ஜாம்பவான்களைக் கொண்ட அணியான தென்னாப்பிரிக்கா பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. மேலும், ஆடவர், மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இறுதி வரை வந்து தோல்வியைத் தழுவியது. மேலும், 19 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியிலும் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸை வாங்கும் டோரண்ட் குழுமம்!

இதுகுறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேமி ஸ்மித் கூறுகையில், “தென்னாப்பிரிக்காவின் நீண்டகால ஐஐசி கோப்பைக்கான தாகம், 2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னரே முடிவுக்கு வரவுள்ளது.

2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் விளையாடவிருக்கிறது. தற்போதைய சூழலில் கிரிக்கெட் சாதாரணமாக இருக்காது. அதனால், நீங்க செய்யவேண்டிய செய்துகொள்ளலாம்.

தென்னாப்பிரிக்கா தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. டி20 கிரிக்கெட் இன்னும் வளரவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். இது அமெரிக்கா வரை பரவியிருப்பதை நாம் காண்கிறோம். கூடிய விரைவில் ஒலிம்பிக்கில் பார்க்க விருக்கிறோம்.

இந்திய கிரிக்கெட் அணி அடிக்கடி வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மற்ற நாடுகளுக்கு வருவாய் வழங்குவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்க நாடுகளுடனோ அல்லது பிற நாடுகளுடனோ ஈடுபடாமல் ஒருவருக்கொருவர் மட்டுமே விளையாடினால், டெஸ்ட் கிரிக்கெட் வணிக ரீதியாக கடினமாகிவிடும்” என்றார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி..! எல்லிஸ் பெர்ரியின் அதிரடி வருகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT