கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பாகிஸ்தான் வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் வந்தடைந்தது.

DIN

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் வந்தடைந்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் வந்தடைந்தது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் பதிவிட்டிருப்பதாவது: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்துகொள்வதற்கான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் வந்தடைந்தது. அவர்கள் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக கடாஃபி மைதானத்தில் அவர்களது முதல் போட்டியில் விளையாடவுள்ளனர் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன

இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT