ரோஹித் சர்மா.  படம்: ஏபி
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வாரா ரோஹித் சர்மா?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஒரு ஐசிசி கோப்பையை வென்று அசத்துவாரா?

DIN

இந்தியாவின் கேப்டன்களில் எம்.எஸ்.தோனி மட்டுமே அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளார். இவருக்கு அடுத்து கேப்டனான விராட் கோலி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.

தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசியின் டி20 உலகக் கோப்பையை சமீபத்தில் வென்றார்.

இறுதிப் போட்டிவரை முன்னேறி ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளைத் தவறவிட்டார்.

தற்போது, சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு தயாராகி வருகிறார். இந்தப் போட்டிகள் நாளை (பிப்.19) முதல் தொடங்குகின்றன.

பிஜிடி தொடரில் ஃபார்மில் இல்லாத ரோஹித் சர்மா இங்கிலாந்து உடனான தொடரில் சதம் அடித்து அசத்தினார்.

இந்தியாவுக்கு அனைத்து போட்டிகளும் துபையில் நடைபெறுகின்றன. பாகிஸ்தானுடன் பிப்ரவரி 23 ஆம் தேதியும், நியூசிலாந்துடனான போட்டி மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் முதல்போட்டி பிப்.20ஆம் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT