முதல் போட்டியில் தோல்வியுற்றது குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டியளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப்.19) மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் தோல்வியுற்றது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2000, 2006, 2009, 2025 என அனைத்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்கு காரணம் இதுதான்
போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறியதாவது:
நியூசிலாந்து அணி 320 ரன்கள் அடிப்பார்களென நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் நல்ல இலக்கை நிரணயித்தார்கள். வில் யங் - டாம் லாதம் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது. நாங்கள் முயற்சித்தோம். ஆனால், அவர்கள் புத்திசாலிதனமாக விளையாடினார்கள். எங்களது டெத் ஓவர் மிகவும் மோசமாக இருந்தது. அதனால்தான் அவர்களால் அந்த அளவுக்கு ரன்களை அடிக்க முடிந்தது.
நாங்கள் இரண்டுமுறை விறுவிறுப்பாகும் தருணத்தை இழந்துவிட்டோம். ஒன்று - டெத் ஓவர்களில், இரண்டு - பேட்டிங்கில் பவர்பிளேவில். தொடக்க வீரர் ஃபகார் ஸமான் இழந்தது மிகவும் முக்கியமானது. நடப்பு சாம்பியன் என்பதை நினைத்து நாங்கள் எங்களுக்கே அழுத்தம் தர விரும்பவில்லை. இந்தப் போட்டி முடிந்தது. அடுத்தது வருவதும் ஒரு சாதாரண போட்டியே என்றார்.
பாகிஸ்தானின் அடுத்த போட்டி இந்தியாவுடன் பிப்.23ஆம் தேதி வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.