சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நாளை (பிப்ரவரி 23) நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.
முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில், நாளைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி களம் காண்கிறது.
மெரினா, பெசன்ட் நகரில் நேரலை
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: துபையில் நாளை நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போட்டியை கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.