பிசிசிஐ செயலாளர் படம்: எக்ஸ் / அஸ்ஸாம் கிரிக்கெட் அசோசியேஷன்
கிரிக்கெட்

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார்.

DIN

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால், செயலாளர் பதவிக்கு தேவஜித் சைக்கியா சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இவர் கிரிக்கெட், சட்டம், நிர்வாகம் எனப் பன்முகத் திறன் கொண்டவர்.

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

இது குறித்து தேவஜித் சைக்கியா கூறியதாவது:

இந்த வெற்றிகளுக்காக நாம் சுயதிருப்திபட்டுக்கொள்ள தேவையில்லை. அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்காக நாம் தயாராக இருக்க வேண்டும். அணியில் அனைவரும் நன்றாக விளையாடுகிறார்கள்.

ரோஹித் அடித்தார், விராட் கோலி சதம், ஹார்திக் பாண்டியா நன்றாக பந்துவீசினார். பாகிஸ்தானுடன் பெற்ற வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது.

துபையில் 70 சதவிகிதம் பேர் இந்திய அணிக்கு ஆதரவளித்தார்கள். சூழலும் மின்னூட்டியது. அனைவரும் இந்தியாவுக்காக பெருமைப்படுகிறோம் என்றார்.

குரூப் பி சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!

மீண்டெழுந்த இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் நிறவைு!

கோவை, மதுரை மெட்ரோ... பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி மனு!

காசி... கங்கை... ரேவா!

SCROLL FOR NEXT