முகப்பு
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் பேட்டிங்!

ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2025 at 8:49 AM
ஆப்கன் வீரர். - படம்: ஏபி
பகிர்:

ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றின் 10-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று (பிப்.28) விளையாடுகின்றன.

குரூப்-ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. குரூப் - பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், லாகூரில் நடைபெறும் போட்டி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

இரு அணிகளுக்கும் வெற்றியுடன் அரையிறுதிக்குச் செல்லும் முனைப்பில் இருக்கையில் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.

காலிறுதிபோல இந்தப் போட்டியில் வெல்பவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

ஆஸ்திரேலியா: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷீத் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments