இந்திய மகளிரணி படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஸ்மிருதி மந்தனா கேப்டன்!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 6) அறிவித்துள்ளது.

DIN

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 6) அறிவித்துள்ளது.

இந்திய அணி அதன் சொந்த மண்ணில் அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை ஸ்மிருதி மந்தனா கேப்டனாக வழிநடத்தவுள்ளார். இந்த தொடரில் வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்துவீச்சாளர் ரேனுகா சிங்குக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற தொடரின்போது, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் விளையாடாத அவர், ஒருநாள் தொடருக்காக அணியில் மீண்டும் இணைந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேனுகா சிங், 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, தொடர் நாயகி பட்டத்தையும் தட்டிச் சென்றார். பணிச்சுமையை குறைக்கும் விதமாக அவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா (துணைக் கேப்டன்), பிரதீகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசப்னிஸ், ராஹ்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டிட்டாஸ் சாது, சைமா தாக்கோர், சயலி சத்கரே.

போட்டி விவரம்

முதல் ஒருநாள் - ஜனவரி 10

இரண்டாவது ஒருநாள் - ஜனவரி 12

மூன்றாவது ஒருநாள் - ஜனவரி 15

(அனைத்துப் போட்டிகளிலும் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT